/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூர்த்தி செய்த படிவத்தை வாங்க வீட்டிற்கு வராமல் அலைக்கழிப்பு
/
பூர்த்தி செய்த படிவத்தை வாங்க வீட்டிற்கு வராமல் அலைக்கழிப்பு
பூர்த்தி செய்த படிவத்தை வாங்க வீட்டிற்கு வராமல் அலைக்கழிப்பு
பூர்த்தி செய்த படிவத்தை வாங்க வீட்டிற்கு வராமல் அலைக்கழிப்பு
ADDED : நவ 21, 2025 03:30 AM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவத்தை பெற்றுக் கொள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீட்டிற்கு வராமல் பொது இடத்திற்கு வரவழைப்பதால், வாக்காளர்கள் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, 95 சதவீதம் படிவத்தை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களுக்கு வினியோகித்துள்ளனர்.
இந்நிலையில், படிவத்தை பூர்த்தி செய்ய சிறப்பு உதவி மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் அங்கு சென்று, படிவத்தை பூர்த்தி செய்து, அதே மையத்திலேயே வழங்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
ஒரு சிலர், படிவத்தை பூர்த்தி செய்து, வீடு தேடி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வருவர் என, எதிர்பார்த்துள்ளனர். ஆனால், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள், வார்டின் ஒரு இடத்திற்கு வாக்காளர்களை வரவழைத்து படிவத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இதனால், வயதானோர் மற்றும் பெண்கள் நேரில் சென்று வழங்க இயலாமலும், அலைக்கழிப்புக்கும் ஆளாகின்றனர். மேலும், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை செல்ல வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், பூர்த்தி செய்த படிவத்தை, வீடுகளுக்கு நேரில் சென்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாக்காளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

