/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சவுடு மண் திருட்டு மூன்று லாரிகள் பறிமுதல்
/
சவுடு மண் திருட்டு மூன்று லாரிகள் பறிமுதல்
ADDED : நவ 21, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்நல்லாத்துார்: ஏரியில் சவுடு மண் திருடிய மூன்று லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்சாலை பின்புறம் உள்ள ஏரியில் அனுமதியின்றி சவுடு மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மூன்று லாரிகளில் சவுடு மணல் அள்ளிக் கொண்டிருந்த ஓட்டுநர்கள் ஆனந்தன், 45 ரவிச்சந்திரன், 40 ஆகியோரை கைது செய்தனர். மூன்று லாரிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

