/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காமராஜரை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை காங்., - எம்.பி., , சசிகாந்த்செந்தில் காட்டம்

ADDED : ஜூலை 17, 2025 09:49 PM
ஊத்துக்கோட்டை:''தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை'' என, திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த்செந்தில் கூறினார்.
ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை அரசு மேனிலைப் பள்ளிக்கு திருவள்ளூர் காங்.,- எம்.பி., சசிகாந்த்செந்தில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 5 லட்சம் ரூபாயில் மேஜை, நாற்காலி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். காங்., எம்.பி., சசிகாந்த்செந்தில் மேஜை, நாற்காலிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:
மாணவர்கள் உயர்ந்த லட்சியத்துடன், கவனம் சிதறாமல், முயன்று படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும். பெண்கள் அவர்களது சொந்த காலில் நிற்க முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா, காமராஜரை விமர்சித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'தமிழகத்தில் காமராஜரை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை' என்றார்.