/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படம் வேண்டாம் ஓராண்டில் மட்டும் 10 பேர் உயிரிழப்பு ரயில்வே சுரங்கப்பாதையில் திடீர் ஆய்வு

ADDED : மே 20, 2025 12:14 AM

திருத்தணி, திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து, திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலைக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில், கடந்த ஓராண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 65, என்பவர், இருசக்கர வாகனத்தில் மகளை ஏற்றிக் கொண்டு, ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்ற போது, மேற்கண்ட இடத்தில் போர்வெல் லாரி மோதி, ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகரன், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஏரிக்கரை தெரு அருகே அடிக்கடி நடக்கும் விபத்துக்களை தடுக்க, முதற்கட்டமாக 'பிளாஸ்டிக் ஸ்டிக்' தடுப்புகள், 750 மீட்டர் துாரத்திற்கு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், 'விபத்து பகுதி, வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என, விழிப்புணர்வு பலகை வைப்பது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.