/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் திருத்தணியில் ஆர்பாட்டம்
/
கொசு ஒழிப்பு பணியாளர்கள் திருத்தணியில் ஆர்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 11:51 PM

திருத்தணி திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில், 330க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நோய் பரவாமல் தடுப்பதற்கும், துாய்மை பணிகள் மேற்கொள்வதற்கும், கலெக்டர் ஒப்புதலுடன், 40 கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து, தினமும் 536 ரூபாயை தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம், 40 கொசு ஒழிப்பு பணியாளர்களில், 25 பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் பெயர்கள் பட்டியலை, கடந்த 3ம் தேதி ஒன்றிய ஆணையர் வெளியிட்டார்.
தொடர்ந்து, 5ம் தேதி ஏற்கனவே வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில், எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் ஆறு பேர் பெயர்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய ஆறு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
நேற்று காலை பாதிக்கப்பட்ட ஆறு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, ஒன்றிய அலுவலகம் முன், ஆறு பேரும் மீண்டும் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

