/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடமாநில வாலிபர் அடித்துக் கொலை?
/
வடமாநில வாலிபர் அடித்துக் கொலை?
ADDED : அக் 18, 2024 09:32 PM
ஐ.சி.எப்:ஐ.சி.எப்., கொன்னுார் நெடுஞ்சாலை, சவுத் காலனி சந்திப்பில், கடந்த சில நாட்களுக்கு முன், வடமாநில வாலிபர் ஒருவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார்.
அவரை மீட்ட ஐ.சி.எப்., போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், 38 வயதுடைய வடமாநில வாலிபர் என்பதும், தலையில் மூன்று இடங்களில் கற்களால் அடித்த வெட்டுக் காயங்கள் இருந்ததும் தெரிந்தது.
அவர் குறித்து விசாரித்த போது, அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். வாலிபரை அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில், வழக்கை கொலை வழக்காக மாற்றி, ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.

