/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது
/
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க பதுங்கியிருந்த பிரபல ரவுடி கைது
ADDED : நவ 16, 2025 02:39 AM

திருவள்ளூர்: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, நேமம் பகுதியில் பதுங்கியிருந்தவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி, அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் 'ஒற்றைக்கண்' ஜெயபால், 65.
இவர் மீது, ஆற்காடு சுரேஷ் கொலை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க திட்டம் தீட்டி, வெள்ளவேடு அடுத்த நேமம் பகுதியில் பதுங்கியிருப்பதாக, வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு நேமம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருந்த ஜெயபாலை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.