/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாயில் ரசாயன கழிவுநீர் வெளியேற்றிய டேங்கர் லாரி பறிமுதல்

ADDED : நவ 16, 2025 02:40 AM

கும்மிடிப்பூண்டி: தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில், தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் வெளியேற்றிய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில், டேங்கர் லாரிகள் அத்துமீறி கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி மாசடைந்து, நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் நேற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றிய டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.
விசாரித்ததில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுநீர் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த பேரூராட்சி செயல் அலுவலர், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.