/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் குடிநீர் வினியோகம் 'கட்' சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை உயர்வு

ADDED : நவ 19, 2025 05:20 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு நகரில் மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று, மேலும் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர்கள், மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும், 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, வயிற்றுப்போக்கால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பிரியா, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குழாய் வாயிலாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது, டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பட்டில் மூன்று இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும், வீடு வீடாக மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில், பாதிப்பு அறிகுறி இருந்தால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.