தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : நவ 23, 2026 04:42 PM

ADDED : நவ 23, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 04:42 PM ADDED : நவ 23, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கவிதா அழைப்பு விடுத்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய நலவாழ்வு குழுமம், திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வாயிலாக, விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில், செவிலியர் பணிக்கு, 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவத்தை, https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில், வரும் டிச., 4ம் தேதிக்குள், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us