/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 23, 2025 08:54 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் உள்ள டோல்கேட் சந்திப்பில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட செயலர் சுலோச்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசியதாவது:
தமிழகம் முழுதும் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்காமல், தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினை ரத்து செய்து, பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

