/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றின் வழித்தடத்தில் கருவேல மரங்கள் கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம்
/
ஆற்றின் வழித்தடத்தில் கருவேல மரங்கள் கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம்
ஆற்றின் வழித்தடத்தில் கருவேல மரங்கள் கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம்
ஆற்றின் வழித்தடத்தில் கருவேல மரங்கள் கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம்
ADDED : செப் 23, 2024 12:45 AM

திருவாலங்காடு: ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி வழியாக சென்னை வரை செல்கிறது. இதன் நீளம், 134 கி.மீ.,
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கொசஸ்தலையாறு திகழ்கிறது. திருத்தணியில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில், கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து, காடு போல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக, திருத்தணி அடுத்த ஆற்காடுகுப்பம் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றில், அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மழைநீர் வெளியேற வழியில்லாமல், நீரோட்டம் தடைபட்டால் கரையை உடைத்து அருகில் உள்ள வயல்வெளி மற்றும் கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், கருவேல மரங்களால் நிலத்தடியில் உள்ள தண்ணீர் உறிஞ்சப்பட்டு, அந்த பகுதியில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பூண்டி நீர்த்தேக்கம் வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றின் நீர் வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

