/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது
/
31 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர்கள் கைது
ADDED : ஆக 22, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு நபர்கள், கையில் பைகளுடன், சோதனைச்சாவடியை நடந்த படி கடந்து செல்ல முயன்றனர்.
அவர்களை சோதனையிட்ட போது, 31 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் ஹன்டல், 39, அர்ஜூன் கலாரி, 23, என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.