/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
/
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
ADDED : ஜூன் 25, 2025 02:44 AM
திருத்தணி:ஊராட்சிகளில் முறையாக குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யாததால், அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தும், மின்மோட்டார் வாயிலாக குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றி, தெரு குழாய்களில் வினியோகம் செய்வதில் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
ஒரு மாதமாக, ஏதாவது ஒரு கிராம மக்கள் குடிநீர் பிரச்னை தொடர்பாக, ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதும், குடங்களுடன் சாலை மறியல், அலுவலகம் முற்றுகை உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், பெரியகடம்பூர், செருக்கனுார், அகூர், புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை குறித்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை.
மேற்கண்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆழ்துளை கிணறுகளில் போதுமான தண்ணீர் இருந்தும், மின்மோட்டார்கள் பழுது, பம்ப் ஆப்பரேட்டர்கள் சரியான முறையில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல், போதிய நிதியுதவி இல்லை என, அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் திருத்தணி ஒன்றியத்தில் நேரடியாக வந்து ஆய்வு செய்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.