ADDED : ஜன 22, 2025 08:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சேலை பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 80; வீட்டிலிருந்த இவரை; கடந்த 20ம் தேதி வீட்டிற்கு வந்த பாம்பு கடித்து விட்டது.
இவரது அலறலைக் கேட்டு வந்த இவரது பேரன் பரத் என்பவர்; மூதாட்டியை திருவள்ளூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார்.,அங்கு அன்றிரவு பலியானார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம், இவரது மகன் சத்தியமூர்த்தி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

