ADDED : அக் 11, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி, 63. இவர் திருத்தணியில் பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு பூ மார்க்கெட்டிற்கு சென்றார்.
அப்போது இரண்டாவது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தும் அவர் கடக்க முயன்றார். அப்போது திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் மின்சார ரயில் மோதியதில் இறந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.