/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை பலி
/
கல்லுாரி பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை பலி
ADDED : ஏப் 21, 2025 11:46 PM

பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை அடுத்த மேலப்பூடியைச் சேர்ந்தவர் மோகன். இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது ஒன்றரை வயது மகள் தீபிகா, நேற்று மாலை வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, பொதட்டூர்பேட்டை - அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லுாரியின் பேருந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை, வெங்கல்ராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 47, என்பவர் ஓட்டி வந்தார்.
குறுகலான சாலையில் வேகமாக வந்த பேருந்து, தெருவில் விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், தீபிகாவின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.