/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மோட்டார் ஒயர்கள் திருடிய ஒருவர் கைது; இருவருக்கு வலை
/
மோட்டார் ஒயர்கள் திருடிய ஒருவர் கைது; இருவருக்கு வலை
மோட்டார் ஒயர்கள் திருடிய ஒருவர் கைது; இருவருக்கு வலை
மோட்டார் ஒயர்கள் திருடிய ஒருவர் கைது; இருவருக்கு வலை
ADDED : ஜூன் 13, 2025 08:25 PM
பொன்னேரி:பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை மோட்டார்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இரண்டு மாதங்களில், 50க்கும் மேற்பட்ட விவசாய மோட்டார்களில் இருந்து ஒயர்கள் திருடுபோகின.
இதுகுறித்து, பொன்னேரி காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், மோட்டார் ஒயர்கள் திருடுபோவதும் தொடர்ந்தது.
நேற்று, பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், மூன்று பேர் கொண்ட கும்பல், விவசாயி ஒருவரின் மோட்டாரில் மின் ஒயர்களை அறுத்து எடுத்துக் கொண்டு செல்வதை விவசாயிகள் பார்த்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, ஒருவர் பிடிபட்டார். மற்ற இருவர் தப்பினர். பிடிபட்டவரை விவசாயிகள் பொன்னேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.