/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது; மூவருக்கு வலை
/
வாலிபருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது; மூவருக்கு வலை
வாலிபருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது; மூவருக்கு வலை
வாலிபருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது; மூவருக்கு வலை
ADDED : ஆக 07, 2025 02:11 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே, முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த மேல்விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 20. இவர், கடந்த 4ம் தேதி, தனது நண்பருடன் கலியனுார் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த கலியனுார் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 24, மற்றும் அவரது நண்பர்கள் நவீன், தீனா, விஷ்ணு ஆகியோர், மனோஜ்குமாரை வழிமறித்து, ஆபாசமாக பேசி கட்டையால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த மனோஜ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பின், அவர் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சூர்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.