/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூன்று கார்கள் மோதல் ஒருவர் பலி
/
மூன்று கார்கள் மோதல் ஒருவர் பலி
ADDED : ஜூலை 12, 2025 09:32 PM
திருத்தணி:திருத்தணி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் விஜய், 29, விக்னேஷ், 30. இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மதியம் நகரி வழியாக, 'ரெனால்ட்' காரில் பள்ளிப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
பொன்பாடி சோதனைச்சாவடி அருகே கார் வந்த போது, எதிரே வந்த 'இன்னோவா' கார் நேருக்கு நேர் மோதியது. அதன் பின் வந்த மற்றொரு காரும், விபத்தில் சிக்கிய கார்கள் மீது மோதியது.
இதில், சென்னை பெருங்களத்துாரைச் சேர்ந்த முகுந்தன், 61, அம்பத்துாரைச் சேர்ந்த வரதராஜ், 53, விஜய், விக்னேஷ், மற்றொரு இன்னோவாவை ஓட்டி வந்த ஓட்டுநர் என, ஐந்து பேரும் படுகாயடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், முகுந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.