/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி: பெண் காயம்
/
லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி: பெண் காயம்
ADDED : செப் 14, 2025 10:45 PM
கும்மிடிப்பூண்டி:நின்ற லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னை, வேளச்சேரியில் வசித்தவர் அமிர்ந்தலிங்கம், 22; கால் டாக்ஸி ஓட்டுநர்.
இவரது தோழி பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வர்ஷினி, 21 மற்றும் நண்பர்கள் கவின், சூர்யா, மகாலிங்கம், செல்வம், உசேன் ஆகிய ஏழு பேர், நேற்று காலை ஆந்திர மாநிலம், தடா நீர்வீழ்ச்சிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரை கவின் ஓட்டிச் சென்றார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் கார் மோதியது. இதில், அமிர்தலிங்கம் அதே இடத்தில் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த வர்ஷினி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.