/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழப்பு
/
அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழப்பு
அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழப்பு
அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழப்பு
ADDED : நவ 10, 2024 02:22 AM

கும்மிடிப்பூண்டி:சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டி நோக்கி, நேற்று அதிகாலை, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ், 61, என்பவர் ஓட்டி சென்றார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் லாரி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, ஆந்திரா நோக்கி சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால், தொடர்ந்து சரக்கு லாரி ஒன்று மோதியது.
அதற்கு பின்னால், நாகராஜ் ஓட்டி சென்ற கன்டெய்னர் லாரி வேகமாக மோதியது. அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார்.
சரக்கு லாரி ஓட்டுனரான ஆந்திர மாநிலம் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், 46, படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை நேரத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.