/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: மற்றொருவர் காயம்
/
தொழிற்சாலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: மற்றொருவர் காயம்
தொழிற்சாலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: மற்றொருவர் காயம்
தொழிற்சாலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: மற்றொருவர் காயம்
ADDED : மே 18, 2025 10:19 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாத்தப்பாளையம் கிராமத்தில், 'காமாட்சி' என்ற பெயரில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
நேற்று அதிகாலை கொதிகலனில் உருக்கப்பட்ட பழைய இரும்பு தீக்குழம்பு, கன்வெயர் பெல்ட் வழியாக கொண்டு செல்லும் போது, பெல்ட் அறுந்து தீக்குழம்பு சிதறியதாக கூறப்படுகிறது.
அங்கு, பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் தாஸ், 42, மீது விழுந்தததில், அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார்.
அருகில் இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரேஜேஷ் குமார், 35, லேசான தீக்காயம் அடைந்தார்.
அவரை மீட்ட சக ஊழியர்கள், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.