/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலத்தகராறில் ஒருவர் தாக்குதல் 10 பேருக்கு வலை
/
நிலத்தகராறில் ஒருவர் தாக்குதல் 10 பேருக்கு வலை
ADDED : செப் 03, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 45. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன், பழனி ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சவுந்தர்ராஜன் தனியாக இருந்த போது, மோகன், பழனி மற்றும் அவரது உறவினர்கள், 10 பேர், சவுந்தர்ராஜனை உருட்டை கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சவுந்தர்ராஜன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சவுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மோகன், பழனி உள்பட, 10 பேரை தேடி வருகின்றனர்.