/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
ADDED : டிச 10, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த, கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணவாளன், 50; நேற்று காலை, இப்பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகே இருக்கும் தனியார் நிலத்தில் பூச்சி மருந்து அடிக்கும் பணி மேற்கொண்டார். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பென்னலுார் பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

