/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் படுகாயம்
/
கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் படுகாயம்
ADDED : ஆக 18, 2025 11:47 PM

பொன்னேரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்ததில், ஒருவர் படுகாயமடைந்தார்.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 28. இவர், நேற்று மாலை நண்பர்களுடன், பொன்னேரி சென்றுவிட்டு, 'போர்டு' காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை பார்த்திபன் ஓட்டினார்.
பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.
காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள், காரின் கண்ணாடிகளை உடைத்து, ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்தவர்கள், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், பார்த்திபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பார்த்திபன் அனுப்பி வைக்கப்பட்டார். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.