/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நூறு நாள் திட்ட பணியாளர் மூன்றில் ஒரு பங்காக...குறைப்பு:40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால் அதிருப்தி
/
நூறு நாள் திட்ட பணியாளர் மூன்றில் ஒரு பங்காக...குறைப்பு:40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால் அதிருப்தி
நூறு நாள் திட்ட பணியாளர் மூன்றில் ஒரு பங்காக...குறைப்பு:40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால் அதிருப்தி
நூறு நாள் திட்ட பணியாளர் மூன்றில் ஒரு பங்காக...குறைப்பு:40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால் அதிருப்தி
ADDED : மே 07, 2025 02:17 AM
திருவாலங்காடு:தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள், ஊரக வளர்ச்சித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் பயன்பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும், 100க்கு 40 நாட்கள் மட்டுமே பணி கிடைக்கும் என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், கடம்பத்துார், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், லட்சக்கணக்கான பணியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் தகுதியுள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நுாறு நாட்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சுழற்சி முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒரு நாளுக்கு, 300 ரூபாய் வீதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட தொகுப்புகள் உள்ளன. கடந்தாண்டு வரை சராசரியாக, ஒரு தொகுப்புக்கு 100 பேர் வீதம் தேர்வு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கேற்ப பணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. விளைநிலங்களில் வரப்பு அமைத்தல், பாத்தி காட்டுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளும் திட்டத்தில் வழங்கப்பட்டன.
பாசனத்தின் போது, மண் கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளும், மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு பணிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு குறித்து, ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு விதிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 1,000 பேர் பணியாற்றிய ஒரு ஊராட்சியில், 330 பேருக்கு மட்டுமே பணி கிடைக்கும் நிலை உள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், வேலை பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
அதிலும், கடந்தாண்டு ஒதுக்கீடு நாட்களில், 70 சதவீதம் வரை பணியாற்றியவர்களுக்கு, மீதமுள்ள பணி நாட்களை நிறைவு செய்யும் வகையில், பணியாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நுாறு நாள் வேலையை நம்பி குடும்பம் நடத்தும் ஏழை மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.