/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
/
உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
உயிருடன் வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2025 10:53 PM
ஊத்துக்கோட்டை,உயிருடன் இருந்த வண்டை விழுங்கிய, ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 33; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்களின் இளைய மகள் குகஸ்ரீ, 1. நேற்று காலை தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை, திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. குழந்தை உயிருடன் வண்டை விழுங்கியதாக தெரிகிறது.
உடனடியாக கார்த்திக், குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர் இல்லாததால், அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே, குழந்தை குகஸ்ரீ இறந்துள்ளது.
இதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர். குழந்தை வண்டை விழுங்கியதால் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரிய வரும் என, அவர்கள் தெரிவித்தனர்.