/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தவெளியில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
திறந்தவெளியில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திறந்தவெளியில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திறந்தவெளியில் செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 24, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: முத்துக்கொண்டாபுரத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில், 110 குடும்பங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. மக்கள் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.