/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்
/
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் ராஜபத்மாபுரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 05, 2025 10:48 PM

திருவாலங்காடு:ராஜபத்மாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் இருப்பதால், விபத்து அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்தாண்டு கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது.
கால்வாய் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது வரை கான்கிரீட் சிலாப் மூலமாக மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள், அவ்வப்போது கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாயை கான்கிரீட் சிலாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.