/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி அருகே திறந்த நிலை கிணறு குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : அக் 26, 2024 01:49 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஐந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கிராமத்தின் வடமேற்கில் ஜி.எஸ்.டி.நகரில், மகளிர் சுயஉதவிகுழு கட்டடத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இதில், 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு எதிரே கிளை நுாலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த மையத்தின் பின்புறம் திறந்த நிலையில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் தற்போது தண்ணீரும் நிரம்பி வருகிறது. தரைமட்டத்திற்கு இணையாக உள்ள இந்த கிணறின் தடுப்பு சுவரை, குழந்தைகளும் எளிதாக தாண்டி விடமுடியும்.
இதனால், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால், குழந்தைகளின் பெற்றோர், அச்சத்தில் தவித்து வருகின்றனர். கிணறுக்கு வேலி அமைக்கவும், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.