/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர்கள் மனு
/
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர்கள் மனு
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர்கள் மனு
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர்கள் மனு
ADDED : ஜூன் 13, 2024 05:45 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன், பூண்டி ஒன்றியம், அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், நந்திமங்களம், காசிரெட்டிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் எல்லாபுரம் ஒன்றியம், பேரண்டூர், செஞ்சியகரம், தாராட்சி, ஆலங்காடு, பால்ரெட்டிகண்டிகை, தொம்பரம்பேடு, தாமரைக்குப்பம் ஆகிய, 13 ஊராட்சிகளை இணைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பூண்டி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளை இணைக்க அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர்
மனுவில் கூறியிருப்பதாவது:
பூண்டி ஒன்றியம், அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், நந்திமங்களம், காசிரெட்டிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய ஆறு ஊராட்சிகளில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள். பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். ஊராட்சிகளில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்ப செலவிற்கும், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர். இந்த ஊராட்சிகளில், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவு வசிக்கின்றனர்.
இவர்கள், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருகின்றனர். பேரூராட்சிகளில் இந்த திட்டம் இல்லை. எனவே, மேற்கண்ட ஊாரட்சிகளை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.