/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு: வடகிழக்கு பருவமழைக்கு முன் தீவிரம்
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு: வடகிழக்கு பருவமழைக்கு முன் தீவிரம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு: வடகிழக்கு பருவமழைக்கு முன் தீவிரம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு: வடகிழக்கு பருவமழைக்கு முன் தீவிரம்
ADDED : ஆக 18, 2024 11:01 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு குளம், ஓடைகள் மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள், நீர்வழிப்பாதை, ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அலுவலர்கள் நீர்வளத்துறை அலுவலர்களுடன் இணைந்து அகற்ற வேண்டும். நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிக்க வேண்டும்.
இழப்பீடு
வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்கி, வெள்ளத்தடுப்புக்கு தேவையான மணல் மூட்டைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பகுதிவாசிகளை வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்ளை தேர்வு செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கு இழப்பீடுகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு வேண்டும் என, துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
எச்சரிக்கை
பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் ஜேசிபி, ரம்பம், பொக்லைன் இயந்திரங்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மின் ஊழியர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியபடுத்த வேண்டும்.
பேரிடரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பழுதடைந்து அபாய நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் பல்துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.