/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு தீர்வு காண உத்தரவு
/
நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு தீர்வு காண உத்தரவு
நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு தீர்வு காண உத்தரவு
நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு தீர்வு காண உத்தரவு
ADDED : பிப் 11, 2025 07:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு விரைந்து தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர பொது விநியோக திட்ட ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும். முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்துள்ளனரா என, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாகவும், சரியான எடை உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள 'ஜி.பி.எஸ்.,' கருவியினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், 2022- - 23ம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த கடை விற்பனையாளர் மற்றும் எடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.