/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தினமும் மதுபானம் இருப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
/
தினமும் மதுபானம் இருப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
தினமும் மதுபானம் இருப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
தினமும் மதுபானம் இருப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : மார் 17, 2024 11:08 PM
திருவள்ளூர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதுபானம் விற்பனை, பதுக்கல் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து மாவட்ட அளவில் அனுப்பப்படும் மதுவகைகள் எடுத்துச் செல்லப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
மதுபான தொழிற்சாலைகளில், 24 மணி நேரமும் காவல் துறை கண்காணிக்க வேண்டும். மாநில எல்லையில் மதுபானங்கள் வருவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியாக விற்பனை ஆவது கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
மதுபானங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இருப்பு தொடர்பான அறிக்கையை தினமும் காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்-சத்யபிரசாத், வெங்கட்ராமன், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
l திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி, நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலை மை வகித்து பேசியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர், 8 மணி நேரத்திற்கு சுழற்சி அடிப்படையில் 3 குழுவாக பணிபுரிய வேண்டும். 10,000 ரூபாய் மதிப்புக்கு மேல் மதுபானம், பரிசு பொருட்கள் வாகனத்தில் இருந்தாலும், 50,000த்திற்கு மேற்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
வாக்காளர்களை கவர, எவரேனும் பணம், பரிசுப் பொருள் அல்லது எந்த சலுகையையும் கொடுத்தாலோ அல்லது பெற்றுக்கொண்டாலோ, அதற்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களை விடுவிப்பது குறித்து கூடுதல் கலெக்டர்-வளர்ச்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்-கணக்கு, மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்யும்.
அரசியல் கட்சியினர், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு 1 லட்சம் ரூபாய் கொண்டு செல்ல எந்த சான்றிதழும் தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

