/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.20 கோடியில் மேம்பால பணி துவக்கம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விமோசனம்
/
ரூ.20 கோடியில் மேம்பால பணி துவக்கம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விமோசனம்
ரூ.20 கோடியில் மேம்பால பணி துவக்கம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விமோசனம்
ரூ.20 கோடியில் மேம்பால பணி துவக்கம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விமோசனம்
ADDED : மார் 14, 2024 01:04 AM

ஊத்துக்கோட்டை,:பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் கிராமத்தில் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின் கீழ், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது.
ஆந்திர மாநிலம், நகரி அருகே மலைக்குன்றுகளுக்கு இடையே ஆரணி ஆறு தோன்றி, பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணி ஆறு அணைக்கட்டு, சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
இங்கிருந்து 43 பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ஏ.ரெட்டிப்பாளையம், ஆண்டார்மடம் ஆகிய தடுப்பணைகள், சிட்ரபாக்கம், லட்சுமிபுரம் ஆகிய அணைக்கட்டுகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, புலிக்காட் எனும் இடத்தில் பழவேற்காட்டில் கலக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, தமிழக -- ஆந்திர எல்லையில் பலத்த மழை பெய்யும். அப்போது, ஆரணி ஆறு பாயும் இடங்களில் உள்ள தடுப்பணை, அணைக்கட்டு ஆகியவை நிரம்பி, உபரிநீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த வெள்ளப்பெருக்கால் பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கிவிடும்.
இதனால், புதுப்பாளையம், காரணி, எருக்குவாய், நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீரில் மூழ்கிய தரைப்பாலத்தின் மேல் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
மேலும், வெள்ளப்பெருக்கு அதிகமானால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.
இதை பார்வையிட வந்த, 'மாஜி' அமைச்சர் நாசர், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மழை நின்ற பின் பணிகள் துவங்கும் என தெரிவித்தார்.
ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தான் மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பூமி பூஜை நடந்துள்ளது. இது, அப்பகுதியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
க.ஆண்டி,
உதவி கோட்ட பொறியாளர்,
நெடுஞ்சாலைத் துறை, கும்மிடிப்பூண்டி.

