/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பி வழியும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு
/
நிரம்பி வழியும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு
ADDED : அக் 18, 2024 02:29 AM

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணி ஆற்றின் குறுக்கே கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு நிரம்பியது.
நீர் பாசன ஏரிகளுக்கான கால்வாயில், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அணைக்கட்டின் கீழ் உள்ள, 20 நீர் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கிறது.
மறுபுறம், ஆரணி ஆற்றில் வெள்ளி பெருக்கு அதிகரித்து விநாடிக்கு, 900 கன அடி நீர் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு மற்றும் கரையோர பகுதிகளை, நீர்வள ஆதார துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணைக்கட்ட பகுதியில், 2500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பியது
ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, தமிழகத்தை நோக்கி பாய்கிறது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை தொடர்ந்து சிட்ரபாக்கம் அணைக்கட்டிற்கு செல்கிறது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் சிட்ரபாக்கம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் மழையால் அணைக்கட்டிற்கு வந்த நீரால் தற்போது நிரம்பி வழிகிறது.