/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீரால் மூழ்கும் நெற்பயிர்கள் பெரும்பேடு ஏரி ஆழப்படுத்தப்படுமா?
/
மழைநீரால் மூழ்கும் நெற்பயிர்கள் பெரும்பேடு ஏரி ஆழப்படுத்தப்படுமா?
மழைநீரால் மூழ்கும் நெற்பயிர்கள் பெரும்பேடு ஏரி ஆழப்படுத்தப்படுமா?
மழைநீரால் மூழ்கும் நெற்பயிர்கள் பெரும்பேடு ஏரி ஆழப்படுத்தப்படுமா?
ADDED : செப் 23, 2024 12:46 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் உள்ள பாசன ஏரி, 650 ஏக்கர் பரப்பளவு உடையது.
ஏரியின் கலங்கல் பகுதியும், நிலப்பரப்பும் சம அளவில் இருப்பதால், மழைக்காலங்களில் அதிகளவில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
ஏரி முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. ஏரியை ஆழப்படுத்தினால், கூடுதல் மழைநீரை தேக்கி வைக்க முடியும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
மடிமைகண்டிகை, மத்ராவேடு, ஆசானபூதுார், வீரங்கிமேடு கிராமங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், நெற்பயிர்கள் மூழ்கி வீணாகின்றன.
விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், அங்குள்ள கால்வாய் வழியாக வெளியேற வேண்டும்.
கால்வாய் துார்ந்து கிடப்பதால், மழைநீர் வெளியேறாமல் விவசாய நிலங்களிலேயே தேங்குகிறது. இந்த கால்வாய் பெரும்பேடு ஏரியை ஒட்டி அமைந்திருந்தும் பயனில்லை.
பெரும்பேடு ஏரி மட்டம் உயரமாகவும், கால்வாய் மட்டம் தாழ்வாகவும் இருப்பது தான் காரணம். பெரும்பேடு ஏரியை ஆழப்படுத்தினால், ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியும்.
மேலும், மடிமைகண்டிகை, மத்ராவேடு, ஆசானபூதுார், வீரங்கிமேடு கிராமங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாவதும் தவிர்க்கலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் கால்வாயை ஆய்வு செய்து, பெரும்பேடு ஏரியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.