/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதல் நிலையம் முற்றுகை
/
நெல் கொள்முதல் நிலையம் முற்றுகை
ADDED : ஜூன் 26, 2025 02:21 AM
திருத்தணி, திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பணம் வழங்க கோரி முற்றுகையிட்டனர்.
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, திருத்தணி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள், தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் வேலஞ்சேரி, தாழவேடு, பட்டாபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து மூன்று மாதங்களாகியும் பணம் வழங்கவில்லை என முற்றுகையிட்டனர்.
பின், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சு நடத்தி, 'விரைவில் பணம் வழங்கப்படும்' என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.