ADDED : டிச 24, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 52; பெயின்டர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல, திருத்தணி -- அரக்கோணம் சாலையில் வள்ளியம்மபுரம் பகுதியில் வேலைக்குச் சென்றார். மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிலையம் நோக்கி சாலையோரம் நடந்து வந்தார்.
அப்போது, புதிய புறவழிச் சாலை அருகே வந்தபோது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆறுமுகம் நேற்று இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.