/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு
/
30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு
30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு
30ல் பழனிசாமி பிரசாரம்: கும்மிடியில் இடம் தேர்வு
UPDATED : டிச 25, 2025 08:07 AM
ADDED : டிச 25, 2025 06:55 AM

கும்மிடிப்பூண்டி: அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், வரும் 30ம் தேதி கும்மிடிப்பூண்டி சட்ட சபை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
கவரைப்பேட்டை தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள இடத்தில், நிகழ்ச்சியை நடத்த அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள், நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.
அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலர்கள் ஸ்ரீதர், ரமேஷ், மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய செயலர்கள் கோதண்டன், வேதகிரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த பிரசார கூட்டத்தில், 40,000 பேர் பங்கேற்பர் என, எதிர்ப் பார்க்கப்படுகிறது.

