/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலவாக்கம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை தேவை; உங்களை தேடி திட்டம் பூந்தமல்லியில் 20ல் நடக்கிறது

ADDED : நவ 12, 2024 07:21 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
பாலவாக்கம்,லட்சிவாக்கம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர்.
தலைமையாசிரியர் உள்ளிட்ட, 18 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியின் பழைய இடத்தில் உள்ள கட்டடவகுப்பறையில், ஆறாம் வகுப்புமாணவர்கள் மட்டும் படிக்கும் வசதிஉள்ளது.
ஏழாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, அங்கிருந்து அரை கி.மீட்டர் துாரத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கும் வகுப்பறையில் இயங்குகிறது.
வகுப்பறைக்காக மாணவர்கள் தினமும் அலைகின்றனர்.
ஏற்கனவேஇப்பகுதியில் சாலைசேதமடைந்துகுண்டும், குழியுமாக உள்ளது.
வகுப்பறைக்காக அடிக்கடி இடம் மாறி, சாலையில் செல்வதால் விபத்து அபாயம்ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் ஒரே இடத்தில் கல்வி கற்க கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என,மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.