/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளம்போல காட்சியளிக்கும் பாலவாக்கம் சாலை
/
குளம்போல காட்சியளிக்கும் பாலவாக்கம் சாலை
ADDED : ஜன 20, 2025 11:58 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், தொம்பரம்பேடு, தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், மஞ்சங்காரணை மற்றும் இணைப்பு சாலை வாயிலாக, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தமிழகத்தில் தொழில் வளத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள தேர்வாய்கண்டிகை சிப்காட், இங்குள்ள சூளைமேனி கிராமத்தில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் உள்ளது.
சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட நெடுஞ்சாலை வழியே பயணிக்கின்றன.
தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே குண்டும், குழியுமாக உள்ளது. பள்ளங்கள், வேகத்தடைகள் எங்கு உள்ளன என தெரியாத நிலையில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால், இச்சாலையில் உள்ள பள்ளங்களில், தண்ணீர் தேங்கி ஆங்காங்கே, குளம் போல் காட்சியளிக்கிறது. பாலவாக்கம், அன்னை தெரசா நகர் நுழைவாயிலில், தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது.
இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பள்ளம் எது என்று தெரியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.