/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
தொடர்ந்து குப்பை தீயிட்டு எரிப்பு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஏப் 23, 2025 02:35 AM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கவர்களை, ஊராட்சி நிர்வாக துப்புரவு ஊழியர்கள், நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் அலுவலக கிடங்கு அருகில் கொட்டப்படுகிறது.
இந்த குப்பையை வைத்து உரம் தயாரிப்பதற்கு உரக்குடில்கள் அமைத்தும், முறையாக பராமரித்து குப்பை பிரித்து எடுக்காமல் மொத்தமாக குப்பை கொட்டி, தீயிட்டு எரிக்கப்படுகின்றன. இதனால், வேளாண் கூடுதல் கிடங்கில் வேலை செய்யும் அலுவலர்கள் குப்பையில் இருந்து எழும் புகையால் அவதிப்படுகின்றனர்.
துப்புரவு ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்காமல், ஓரளவு குப்பை சேர்ந்ததும், தீயிட்டு கொளுத்துகின்றனர்.
தொடர்ந்து, குப்பைக்கு தீ வைத்து கொளுத்துவதால், அங்கு புகை மண்டலமாக மாறுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பை தீயிட்டு கொளுத்துவதை தடுத்து நிறுத்தி, உரம் தயாரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.