/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி மன்ற கட்டட பணி துவக்கம்
/
ஊராட்சி மன்ற கட்டட பணி துவக்கம்
ADDED : நவ 02, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன.
இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல்.
இப்பகுதி மக்கள் வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட் வரி இனங்களை, அரசுக்கு செலுத்த அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், சிதிலமடைந்து காணப்பட்டது.
புதிய கட்டடம் கட்ட, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணிக்கான டெண்டர் விடப்பட்டு நேற்று பணி துவக்கப்பட்டது.

