/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 11, 2025 03:02 AM

திருத்தணி,:புச்சிரெட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள், 100 நாள் வேலை கேட்டு முற்றுகையிட்டனர்.
திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிபள்ளி ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகளுக்கு சில மாதங்களாக நுாறு நாள் வேலை வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
இதையடுத்து, ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் நுாறு நாள் வேலை கேட்டு கோரிக்கை வைத்தும் பலனில்லை. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பெருமாள் தலைமையில், புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை வழங்க கோரி அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருத்தணி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பகுதிவாசிகள் 100 நாள் வேலை வழங்க கோரி பெண் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விரைவில் நுாறு நாள் வேலை வழங்குவதாக ஒன்றிய அதிகாரி உறுதியளித்தார். தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.