/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி துறையில் அதிரடி ஊராட்சி செயலர் பணியிடமாற்றம்
/
ஊரக வளர்ச்சி துறையில் அதிரடி ஊராட்சி செயலர் பணியிடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் அதிரடி ஊராட்சி செயலர் பணியிடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் அதிரடி ஊராட்சி செயலர் பணியிடமாற்றம்
ADDED : ஆக 25, 2025 01:15 AM
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில், ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை, மாவட்ட கலெக்டர் பணியிடமாற்றம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இதில், 2023 மார்ச் மாதம் அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், 10 ஆண்டுகளாக பணிபுரிந்த, 211 ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்தார்.
தற்போது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை, தமிழக அரசு உத்தரவுப்படி, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.
வில்லிவாக்கம் ஒன்றியத்தை தவிர்த்து, 13 ஒன்றியங்களுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், இரண்டு நாட்களாக பணியிடமாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில், பூண்டி - 10, கடம்பத்துார் - 9, திருவள்ளூர் - 8, சோழவரம் - 6, பள்ளிப்பட்டு - 1, ஆர்.கே.பேட்டை - 4, மீஞ்சூர் - 3, பூந்தமல்லி - 4, எல்லாபுரம் - 2, கும்மிடிப்பூண்டி - 4, திருத்தணி - 2, திருவாலங்காடு - 5, புழல் - 2, ஆகிய 13 ஒன்றியங்களில், 60 ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்களை பணியிலிருந்து விடுவித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்படி, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கலெக்டர் பிரதாப் எச்சரித்துள்ளார்.