/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் எதிர்பார்ப்பு
பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் எதிர்பார்ப்பு
பள்ளிகளில் இரவு காவலர் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் எதிர்பார்ப்பு
ADDED : மே 14, 2025 06:20 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அரசு துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் என, 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி வாயிலாக கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வி மேம்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அரசால் செய்யப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், பாதுகாப்பற்ற சூழ்நிலையே உள்ளது. இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம், திருவாலங்காடு உள்ளிட்ட மேல்நிலை பள்ளிகளில், இரவு காவலர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால், பள்ளியின் பாதுகாப்புக்கும் எந்த உறுதியும் இல்லாத நிலை தான் தொடர்கிறது. சில பள்ளிகளில், தற்காலிக இரவு காவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது.
தற்போது, அரசு பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என, கட்டமைப்பு நவீனமயமாக மாறி வருகிறது. ஆனால், பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், இடைவெளியில் மாணவர்கள் வெளியில் சென்று வந்தாலும், ஆசிரியர்களால் கண்காணிக்க முடிவதில்லை.
இதனால், தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில், உள்ளாட்சி துறைகளின் வாயிலாக, இரவு காவலர்களை நியமிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.