/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காளிகாபுரத்தில் மகளிர் பள்ளி துவக்க பெற்றோர் கோரிக்கை
/
காளிகாபுரத்தில் மகளிர் பள்ளி துவக்க பெற்றோர் கோரிக்கை
காளிகாபுரத்தில் மகளிர் பள்ளி துவக்க பெற்றோர் கோரிக்கை
காளிகாபுரத்தில் மகளிர் பள்ளி துவக்க பெற்றோர் கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 01:33 AM

ஆர்.கே.பேட்டை:ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியுடன், கூடுதலாக கிராமத்தின் நடுவே உள்ள வளாகத்தில் மகளிர் மேல்நிலை பள்ளி துவங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில், 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில், பேருந்து நிலையம் அருகே அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி வளாகத்திற்கு கூடுதலாக, ஊருக்கு வெளியே பஞ்சாட்சர மலையடிவாரத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் புதிய பள்ளி வளாகம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த புதிய வளாகத்தில் இரண்டு அடுக்கு வகுப்பறை கட்டடம், ஆய்வகம், கலையரங்கம், விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஊரில், பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளி வளாகமும் செயல்பட்டு வருகிறது.
ஊருக்கு வெளியே தனியே மலையடிவாரத்தில் உள்ள பள்ளி வளாகத்திற்கு சென்று வர மாணவியர் தயங்குகின்றனர். இதனால், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை தனியே பிரித்து, புதிய மகளிர் மேல்நிலைப் பள்ளியாக செயல்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.