/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில் வணிக வளாகம்: டெண்டர் அறிவிப்பு 'வாபஸ்'
/
பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில் வணிக வளாகம்: டெண்டர் அறிவிப்பு 'வாபஸ்'
பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில் வணிக வளாகம்: டெண்டர் அறிவிப்பு 'வாபஸ்'
பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில் வணிக வளாகம்: டெண்டர் அறிவிப்பு 'வாபஸ்'
ADDED : பிப் 15, 2025 08:30 PM
சென்னை:திருவள்ளூர், பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில், வணிக வளாகம் கட்ட வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனே திரும்பப் பெறப்படும் என, ஹிந்து அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனு:
புட்லுார் பூங்காவனத்தம்மன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு சொந்தமாக 2.95 ஏக்கர் நிலத்தில், வணிக வளாகம் கட்ட, கோவில் அறங்காவலரால் கடந்தாண்டு 27ல் டெண்டர் கோரப்பட்டது.
வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக, பக்தர்களின் ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமலும், அறநிலையத்துறை சட்ட விதிகளை பின்பற்றாலும், இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி, வணிக வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, வணிக வளாகம் கட்ட வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனே திரும்ப பெறப்படும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.